சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. துறைமுகம் தொகுதியில் முராத் புஹாரி மதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் பிரபல புஹாரி ஹோட்டல் குடும்பத்தைச் சேரந்தவர். கடந்த பல ஆண்டுகளாக மதிமுகவில் சிறுபான்மை அணியின் செயலாளராக இருப்பவர்.

இவரை அறிமுகம் செய்து வைத்து வைகோ பேசுகையில் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இது என்ன இடி அமீன் சர்க்காரா? லேடி இடி – அமீனா ஜெயலலிதா? இது என்ன ஹிட்லர் சர்க்காரா? லேடி ஹிட்லரா ஜெயலலிதா? இது என்ன முசோலினி சர்க்காரா? லேடி முசோலினியா ஜெயலலிதா?

இந்த நாலு பேர் சாவுக்கு நீங்கதான் காரணம். உங்களை நான் கொலைகாரி என்று சொல்வேன். வழக்கு போடுங்க. ஜெயலலிதா ஒரு கொலைகாரி என்பதை நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் என்று பேசினார் வைகோ.

வைகோ வர வர சவால் விட்டுப் பேசுவதும், வழக்குப் போடுங்க நான் பாத்துக்கறேன் என்று பேசி வருவதும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

மக்கள் சேவை போட்டிக்கு 3785 பேர் தெரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…
Read More

ஸ்டாலின் முதல்வராவது எப்போது ? – கருணாநிதி விளக்கம்.

தமக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தம்முடைய முதுமையை சுட்டிக்…
Read More

வெயில் அதிகமா இருக்கு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க – தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என…
Read More

தமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யார்?

நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து…