வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது பாகிஸ்தான்

0
66

காலிறுதி போட்டிகள் தொடங்கி விட்டன, இனி மேலாவது விறுவிறுப்பான போட்டிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் இப்படி அநியாயமாக பாகிஸ்தானிடம் சரண் அடைவார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

போட்டி தொடங்கியது முதலே பாகிஸ்தானின் கை ஓங்க ஆரம்பித்து விட்டது முஹம்மது ஹபீஸ் சுழலில் வெஸ்ட் இண்டீஸ் தட்டு தடுமாற விக்கெட்டுக்கள் சரிந்த வண்ணம் இருந்தன. உமர் குல் மற்றும் ஹபீஸ் சேர்ந்து 16/3 என அதள பாதாள நிலைக்கு வெஸ்ட் இண்டீசை தள்ளிய பின் சீனியர் பேட்ஸ்மேன்கள் சர்வான் மற்றும் சந்தர்பால் தாக்கு பிடித்து 50 ரன்னை தண்ட உதவினர்.

ஆனால் மீண்டும் அந்த அணி தள்ளாட தொடங்கியது, ஒன்பது பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அப்போது ஸ்கோர் 71/8 ஆக இருந்தது.

கடைசியில் அப்ரிடி தன் விக்கெட வேட்டையை ஆரம்பிக்க வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. சந்தர்பால் 44 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் தனி ஆளாக களத்தில் போராடி கொண்டு இருந்தார்.

வெறும் 113 ரன்கள் எடுத்தல் வெற்றி என்றால் எளிய இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தானிய தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் இருந்து அடித்து ஆடி ஓவர்களில் வெற்றி பெற்றனர். சிறப்பாக விளையாடிய ஹபீஸ் ரன்கள் எடுத்தார்.

பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் திறமை காட்டிய ஹபீஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

நாம் தோற்கடித்த வெஸ்ட் இண்டீசை நம் பங்காளிகள் தோற்கடித்து விட்டார்கள்.
நம் பங்காளிகள் தோற்கடித்த பாகிஸ்தானை நாம் தோற்கடிக்க நாளை நல்ல வேளை அமையும் என்ற நம்பிக்கையுடன்…..வேறென்ன செய்வேன்?

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரை இறுதி நடந்தால் நல்ல தானே இருக்கும்???

உங்கள் கருத்தை தெரிவிக்க