கோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

0
239

கோடையில் கவனத்துடன் சருமத்தை பராமரித்தாலே போதும் அழகான சருமத்தை பெறலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நிறத்தை மெருகேற்ற இயற்கை முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்

சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் சருமம் வறண்டும்,முகத்தில் சுருக்கங்களும் காணப்படும்.உங்களின் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக இருந்தால்,எண்ணெய் பசையற்ற மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள்.மேலும் மாயிஸ்ச்சரைசர் வைட்டமின் E உள்ளதாகவும்,இயற்கை எண்ணைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும்,இது நிறத்தை அழகாகவும் நிறத்தை வெண்மையுடனும் தோன்ற செய்யும்.

நீர்ச்சத்துக்கள்

குறிப்பிட்ட காய்கறி,மற்றும் பழங்கள் உங்கள் சருமத்தில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான நீர் நிறைந்த காய்கறிகள் எடுத்துக்காட்டாக தர்பூசணி,ஆரஞ்சு,வெள்ளரிக்காய்,வெங்காயம்,கீரை வகைகள்,இவையனைத்தும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது.

வீட்டிலிருந்தபடியே அழகான சருமம் பெறலாம்

*வெள்ளரிக்காய் இயற்கையாகவே பிளீச்சிங் தன்மையை கொண்டது,வெள்ளரி சாறு சருமத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் மென்மையாக இருக்கும்.

*எழுமிச்சம் பழ சாறு தோளில் உள்ள அழுக்கை நீக்குவதுடன்,தேவையற்ற எண்ணெய் பசையையும் அகற்றுகிறது.மேலும் இதில் உள்ள வைட்டமின் c சருமம் மேருகேற்றியும்,சிட்ரிக் அமிலம் இயற்கை பிளீச்சிங்காகவும் செயல்படுகிறது.

*மஞ்சள் தூளை,பாலுடன் கலந்து சருமத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் ஈரப்பதத்துடன் பளபளப்பாகவும் இருக்கும்.

*கற்றாழையின் சாறு ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் நிறைந்தது.இந்த சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன்,தழும்புகளை மறையச்செய்கிறது.

தினமும் இரண்டு முறை முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.யோகர்ட் மற்றும் தேனை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால்,முகம் மிருதுவாக இருக்கும்.

உங்கள் கருத்தை தெரிவிக்க