குழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்

    0
    146

    தானிய சூப் மிகவும் ருசியான சத்துள்ள சூப்,இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.

    *குழந்தைகள் மட்டுமல்லாமல்,அனைவரும் குடிக்கலாம்.இது குடிப்பதன் மூலம் நன்றாக பசி எடுக்க தூண்டும்.சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.

    *புரோட்டின் அதிகம் கொண்டுள்ள சூப்.

    soup

    தேவையான பொருட்கள்;

    இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி
    முளைகட்டிய தானியங்கள் கலவை (அல்லது)ஏதாவது ஒரு தானியம் -1 கப்
    பீன்ஸ்,உருளைக் கிழங்கு,கேரட் -1/4 கப்
    நெய்-2 தேக்கரண்டி
    கொத்தமல்லி-சிறிதளவு
    வெங்காயம்-1/4 கப்
    லவங்கம்-4
    உப்பு-தேவையான அளவு
    நீர் -3 டம்ளர்

    தயாரிக்கும் நேரம்;25நிமிடம்

    செய்முறை;

    *ஒரு குக்கரில் நெய் ஊற்றி ,நெய் உருகியவுடன் லவங்கம் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

    *வெங்காயம் சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்களை கொட்டி இரண்டு,மூன்று முறை கிளற வேண்டும்.

    *பின் முளைகட்டிய தானியத்தை சேர்த்து ஒரு முறை கிளறி,தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    *தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும்.

    *4 விசில் வந்ததும் 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து காய்களை மட்டும் வடிகட்டி மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும்.

    *பின்பு அரைத்த கலவையை வடித்த நீருடன் கலந்து குக்கரில் ஊற்ற வேண்டும்.

    *அடுப்பை சிம்மில் வைத்து,குக்கரை திறந்து வைக்க வேண்டும்.

    *ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி சூப்பின்மீது தூவி இறக்கிவிட வேண்டும்.

    *சுவையான தானிய சூப் தயார்.

    (குறிப்பு;தேவையானால் 1 தேக்கரண்டி சோள மாவு கரைத்து அரைத்த கலவையுடன் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.இது கூடுதல் சுவையையும்,கரைசலுக்கு அடர்த்தியையும் தரும்.)

    உங்கள் கருத்தை தெரிவிக்க